மகாராஷ்டிரா மாநிலம், மும்பை கோரேகான் பகுதியில் உள்ள வெஸ்டின்(westin) மேம்பாலத்தின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் மேம்பாலம் வழியாகச் சென்ற வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு பயணத்தை தொடராமல் வரிசை கட்டி நின்றன.
மேம்பாலத்தில் நின்ற டேங்கர் லாரியில் தீ! - மேம்பாலம் நின்ற லாரி
மும்பை : மேம்பாலத்தில் நின்ற பெட்ரோல் டேங்கர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் டேங்கர் லாரி
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவுமில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.