தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சாலையில் கொட்டிய எண்ணெய்: விபத்தில் 5-க்கு மேற்பட்டோருக்கு காயம்! - road accicent

புதுச்சேரி: இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் எண்ணெய் கொட்டியதால் விபத்து ஏற்பட்டு ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சாலை விபத்து

By

Published : May 12, 2019, 2:22 PM IST

புதுச்சேரி - விழுப்புரத்தை இணைக்கும் சாலையில் உள்ள இந்திராகாந்தி சதுக்கத்தின் அருகே, போக்குவரத்து சற்ற மந்தமாக இருக்கும் காலை வேலையில், அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் எதிர்பாராதவிதமாக தான் கொண்டு சென்ற எண்ணெயை சாலையில் கொட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள் இந்த எண்ணெயில் வழுக்கி விழுந்துள்ளனர். அடுத்தடுத்து வழுக்கி விழுந்ததில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் உடனே அங்குள்ள டிராபிக் காவலருக்குத் தெரியப்படுத்தப்பட்டதும், அவர் அவ்விடத்திற்கு வந்து மணல், சிறு சிறு கற்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து எண்ணெய் கொட்டியிருந்த அந்தப் பகுதியில் வைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் செல்வோர் பார்த்து போகுமாறும் அறிவுரை கூறினார்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் வந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எண்ணெயை அகற்றியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் உடனடி நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details