தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பனி விலகியது! 6 மாதத்திற்கு பிறகு கேதார்நாத் கோயில் திறப்பு - kedharnath temple

டேராடூன்: ஆறு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட உத்தரகாண்ட் கேதார்நாத் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கேதாராநாத் கோயில்

By

Published : May 9, 2019, 8:23 AM IST


உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அருகே மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது கேதார்நாத் சிவன் கோயில். இக்கோயில் சிவனை கேதாரீஸ்வரர் என்றும், அம்பாளை கேதார கௌரி என்றும் அழைக்கின்றனர்.

இக்கோயில் வருடந்தோறும் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும்போது பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும். பின்னர் ஆறு மாத காலம் இமயமலையின் கடும் குளிர் காரணமாக இக்கோயில் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுவிடும். அப்போது, சிவன் சிலை உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு வழிபாடு செய்யப்படும்.

தரிசனத்தில் ஈடுபட்ட பக்தர்கள்

சிவபெருமானின் 12 வகையான ஜோதிர் லிங்க இல்லங்களில் ஒன்றாக இக்கோயில் உள்ளதால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இங்கு வந்து, தரிசனம் செய்து செல்வர்.

பக்தர்கள் தரிசனம் செய்யும் வீடியோ

இந்நிலையில் ஆறுமாதத்திற்கு பிறகு இன்று பக்தர்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details