இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாநில அரசுக்கும் எவ்வளவு நிதிகள் வழங்கப்பட வேண்டும் என முடிவு செய்யும் அமைப்பான நிதி ஆயோக் அலுவலகம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தச் செய்தி நிதி அயோக் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் காலை 9 மணிக்கு தெரிவிக்கப்பட்டு, அலுவலகம் மூடப்பட்டது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் இந்த அலுவலகத்தில் அலுவல் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாக கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சில நாள்களில் கரோனா இல்லாத தெலங்கானா - கேசிஆர் நம்பிக்கை