ஒடிசா மாநில ஆளுநர் பேராசிரியர் ஸ்ரீகணேஷி லால் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவரது குடும்பத்தின் மற்ற நபர்களுக்குச் சோதனை செய்ததில் நான்கு உறுப்பினர்களுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒடிசா ஆளுநருக்கு கரோனா பாதிப்பு உறுதி - ஒடிசா ஆளுநருக்கு கரோனா
புபனேஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் ஸ்ரீகணேஷி லால் மற்றும் அவரது மனைவிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
![ஒடிசா ஆளுநருக்கு கரோனா பாதிப்பு உறுதி odisha's-governor](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:23:27:1604303607-9397903-1045-9397903-1604296575583.jpg)
இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதற்கிடையில், ஆளுநர் குடும்பத்துடன் தொடர்பு கொண்ட நபர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், 'ஆளுநரும் அவரது மனைவியும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர்கள் உடல்நலம் பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.