பாரம்பரியமிக்க பூரி ஜெகன்நாத் கோயில் ரத யாத்திரை நேற்று நிறைவடைந்தது. ரத யாத்திரையின் இறுதிநாளான நேற்று ஜெகநாதரின் சிலைகள் கருவறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இது ரத யாத்திரையின் இறுதி நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. முன்னதாக, இந்த ஆண்டு கரோனா பாதிப்பின் காரணமாக ரத யாத்திரை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரோனா பாதிப்புக்கு மத்தியில் நிறைவடைந்தது பூரி ரத யாத்திரை!
பூரி: கரோனா பாதிப்புக்கு மத்தியில் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளோடு நேற்று பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிறைவுபெற்றது.
odishas-famous-bahuda-rath-yatra-concludes
முதலில் ரத யாத்திரை நடத்துவதற்குத் தடைவிதித்த உச்ச நீதிமன்றம், பின்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு கோயில் நிர்வாகம் விழாவை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. தேர் இழுக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று இல்லை என்பதை உறுதிசெய்த பின்னரே அவர்கள் விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.