ஒடிசா மாநிலம் நந்தன்கனன் வன உயிரியல் பூங்காலிருந்த சுப்ரான்ஷு என்ற வெள்ளை நிறப் புலி ஒன்று கல்லீரல் தொடர்பான வியாதியால் அவதிப்பட்டுவந்தது. கடந்த ஒருமாத காலமாக புலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 வயதான அந்தப் புலி, சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.
இது குறித்து, உயிரியல் பூங்கா ஊழியர் கூறுகையில், "வெள்ளைப் புலி கடந்த சனிக்கிழமை முதல் சரியாகச் சாப்பிடவில்லை. பூங்காவில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது, புலியின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை சரிவர இயங்காதது தெரியவந்தது. இதையடுத்து ஒடிசா வேளாண்மை, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நிபுணர்களின் மேற்பார்வையில் வெள்ளைப் புலி வைக்கப்பட்டது. எனினும் சுப்ரான்ஷு இன்று காலை 10.15 மணிக்கு உயிரிழந்தது" என்றார்.