சில நாட்களுக்கு முன்பு ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் முற்றிலும் பாதிப்புக்குள்ளானது. அதில் இருந்து அம்மாநில மக்கள் மீண்டு வருவதற்குள், கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழையால் கோயிலுக்குள் நுழைந்த வெள்ளம்! - வெள்ளம்
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் பலங்கீர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் ஹரிசங்கர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்து ஓடும் காட்சி பார்ப்பவரை வியக்க வைக்கிறது.
odisha
மாநிலத்தின் பல இடங்களில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் பலங்கீர் பகுதியில் உள்ள ஹரிசங்கர் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. அது மட்டுமல்லாமல் அருகில் உள்ள ஹரிசங்கர் அருவியிலும் தண்ணீரில் மண் கலந்து வருகிறது. இதனை கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் காண்கின்றனர்.