தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓவியம் வரையத் தெரியாத மாணவர்களைத் தாக்கிய ஆசிரியரின் கணவர்! - odisha School News

பலங்கிர்: ஓவியம் வரையத் தெரியாத மாணவர்களை தொடக்கப்பள்ளி ஆசிரியரின் கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

odisha-teachers-husband-thrashes-students-for-failing-to-make-drawing

By

Published : Nov 4, 2019, 1:57 PM IST

ஒடிசா மாநிலம் பலங்கிர் மாவட்டத்தில் உள்ள ஜல்பாலி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. அப்பள்ளியில் ஆசிரியராக லக்ஷ்மி மெஹர் பணியாற்றிவருகிறார். நேற்று பள்ளியின் முதல்வர் பணிக்கு வராததால், ஆசிரியை ஒரே நேரத்தில் இரு வகுப்புகளை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அந்த ஆசிரியை, அவரது கணவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதனிடையே ஒரு வகுப்பிலிருந்த மாணவர்களை ஓவியம் வரையும்படி ஆசிரியைக் கூறியுள்ளார். அதையடுத்து உதவிக்கு வந்த அந்த ஆசிரியையின் கணவர், வகுப்பறையினுள் இருந்த மாணவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டுள்ளார்.

அப்போது ஓவியம் வரையத் தெரியாத மாணவர்களை பிரம்பை வைத்து பலமாக அடித்துள்ளார். இதில் சில மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெற்றோர்களுக்குத் தெரியவர, உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்களைத் தாக்கிய ஆசிரியையின் கணவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்பிணியை 5 கி.மீ தொலைவு தூக்கிச் சென்ற சுகாதார ஊழியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details