ஒடிசா மாநிலம் காலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிந்து மகானந்த். டூட்கேல் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவரும் இவர், வாட்ஸ்அப்பில் கரோனா குறித்த தவறான தகவலை பகிர்ந்துள்ளார். பெங்களூருவிலிருந்து வந்த நபர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கலியகனி கிராமத்தில் வசித்துவருவதாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பகிரப்பட்டது தவறான செய்தி என தெரியவந்ததையடுத்து, மகானந்தை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டபோது, தனது செல்போனை பயன்படுத்தி யாரோ வதந்தியை பரப்பி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.