தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாணவர்களுக்கு விஞ்ஞானத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த சுவர் ஓவியம்! - ஓடிசா

ஒடிசா:  மல்கங்கிரியில் உள்ள கஸ்தூர்பா காந்தி பெண்கள் ஆரம்பப் பள்ளியில் மாணவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

air-india-flight

By

Published : Oct 28, 2019, 10:10 AM IST

ஒடிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் கஸ்தூர்பா காந்தி பெண்கள் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மாணவர்களிடையே படிப்பின்மீது ஆர்வத்தை உருவாக்குவதற்காக பள்ளி சுவரின் மீது ஏர் இந்தியா விமானத்தின் ஓவியத்தை வரைந்தனர். இந்த ஓவியம் தொலைவிலிருந்து பார்பதற்கு ஒரு உண்மையான விமானம்போல காட்சியளிக்கிறது. இது மாணவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த ஓவியத்தைப் பார்த்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் இந்தச் சுவர் ஓவியமானது வகுப்பறைக்குள் நுழையும் போது, விமானத்தில் ஏறுவது போல் உள்ளது என அப்பள்ளி மாணவர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் கூறும் போது, இந்தச் சுவர் ஓவியமானது மாணவர்களிடையே விமானத்தின் பல்வேறு பாகங்களைப் பற்றி அறிந்துக்கொள்ளவும், விஞ்ஞானத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும் உதவும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க:

திருமண பந்தத்தைத் தாண்டிய உறவால் நேர்ந்த விபரீதம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details