தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமருக்கு ஒடிசா முதலமைச்சர் கடிதம் - பிரதமருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: 380.39 கோடி ரூபாய் நிதி வழங்குமாறு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு கோரிக்கைவிடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்
முதலமைச்சர் நவீன் பட்நாயக்

By

Published : Mar 30, 2020, 10:37 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் மக்கள் வேலையின்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், ”21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் நடப்பு ஆண்டில் 36 லட்சத்து 10 ஆயிரத்து 797 தொழிலாளர்கள் உள்ளனர். எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் 380.39 கோடி ரூபாய் நிதி வழங்கவேண்டும்” என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'சுகாதாரப் பணியாளர்கள் நிஜ ஹீரோக்கள்'- பிரதமர் நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details