ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் மானஸ்பட்டா. இவர் தமிழ்நாட்டில் தினக் கூலியாக வேலை பார்த்துவந்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் வேலை இழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார்.
இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அவருக்கு தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர் எந்தவித அறிகுறிகளுமின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணிய மருத்துவர்கள் இவரைத் தமிழ்நாட்டிலேயே ஏழு நாள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவந்தனர்.
பின்னர் இவர் குணமடைந்துவிட்டதாகக்கூறி வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர். இவர் ஒடிசா சென்ற நிலையில், அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏழு நாள்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறி, அவரது கிராம மக்கள் அவரைக் கட்டாயமாகத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.