தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு தூக்கு! - 3 வயது குழந்தை பாலியல் வன்புணர்வு குற்றவாளிக்கு தூக்கு

ஒடிசா: மூன்று வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து, கொடூரமாகக் கொலை செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை வழங்கப்பட்டது.

odisha rape capital punishment, பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை
odisha rape capital punishment

By

Published : Dec 19, 2019, 8:32 PM IST

Updated : Dec 19, 2019, 9:59 PM IST

ஒடிசாவின் கியோஜிஹார் மாவட்டத்தில் உள்ள சாங்சாங் கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் நாயக். இவர், 2017ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் தனது உறவினர் மகளை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்தார்.

இது குறித்து விசாரணை செய்த சாம்புவா காவல் துறையினர், சுனில் நாயக்கை கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம், குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தின் (போக்சோ) கீழ் பல்வேறு பரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சுனில் நாயக் குற்றவாளி என்றும் அவருக்கு அதிபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனையைக் கேட்டு ஆடிப்போன நாயக், தான் நிரபராதி என்றும் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் எனவும் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் ஒடிசாவில் ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய கெடு!

Last Updated : Dec 19, 2019, 9:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details