தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நபர் கைது - முன்னாள் காதலியின் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்த நபர் கைது

ஜெய்ப்பூர்: முன்னாள் காதலியின் ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Odisha man arrested for posting obscene photographs of ex girlfriend on social media
Odisha man arrested for posting obscene photographs of ex girlfriend on social media

By

Published : Feb 10, 2020, 8:48 AM IST

23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பானிக்கோய்லியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதையடுத்து கான்டிகாடியா-மலந்தாபூர் கிராமத்தில் வசித்துவந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை அந்த பெண் கடந்த ஆண்டு சந்தித்துள்ளாா். இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது அந்தப் பெண்ணின் ஆபாச படங்களை அந்த நபர் எடுத்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின்பேரில்,கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் புகாரளித்த பெண்ணின் குடும்பத்துக்கு குற்றம்சாட்டப்பட்டவர் கடன் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் கொடுத்த பணத்தை அவர் கேட்டபோது அந்தப் பெண் அவரை தவிர்த்துள்ளார் என்றும் அதன் பிறகு அந்தப் பெண் வேறொரு நபருடன் உறவில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் புகாரளித்தப் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அப்பெண்ணின் உறவினருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் ஐ.டி சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டு காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

இதையும் படிங்க: பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தி எப்போது உயரும்? ஈடிவி பாரத்துக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி தலைவர் பிரத்யேக பேட்டி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details