ஒடிசா மாநிலம் சத்திபரகட்டா என்னும் கிராமத்தில் வனத்துறையினர் திடீரென்று சோதனை மேற்கொண்டனர். வனத்துறை அலுவலர்களின் சோதனையின்போது சிறுத்தையின் தோலைக் கடத்தவிருந்த ஆறு பேர் பிடிபட்டனர்.
சிறுத்தை தோல் கடத்தல், ஆறு பேர் கைது! - சிறுத்தை தோல் கடத்த முயற்சி
புவனேஷ்வர்: சத்திபரகட்டா என்னும் கிராமத்தில் சிறுத்தையின் தோலைக் கடத்த முயன்ற ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
leopard skin seized
கடத்தப்படவிருந்த சிறுத்தையின் தோலை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். அந்தச் சிறுத்தையின் தோல் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பை எட்டும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக அந்த ஆறு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்தக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாரேனும் உள்ளார்களா என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நடுங்க வைக்கும் கருஞ்சிறுத்தையின் தோற்றம்!