ஒடிஸா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி இஷ்ஹிதா ஆச்சாரி. கோவிட் - 19 ஊரடங்கு காரணமாக விடுப்பில் உள்ள அவர், லாக்டவுன் காலத்தில் ராமாயணம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து, தான் பார்த்த இந்த தொடரை கதையாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் இஷ்ஹிதாவின் மனதில் எழுந்தது. இவருக்கு அவரது பெற்றோரும் தொடர்ந்து ஊக்கமளிக்கவே, தொடர்ச்சியாக 22 நாட்கள் ராமாயண கதையை புத்தக வடிவில் எழுதி முடித்துள்ளார்.