புவனேஷ்வர்: ஆறு மணிநேரத்தில் ஆம்பன் புயல் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
வங்கக் கடலில் நான்கு நாட்களுக்கு முன்னர் உருவான காற்றழுத்தம் நேற்று (மே 16) தீவிர காற்றழுத்தமாக மாறியது. பின்னர் அது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர தொடங்கியது. தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டதாக மாறியுள்ளதால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அதிக அளவு வெப்ப நிலை நிலவுகிறது.
தென்கிழக்கும், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் இன்று மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. பின்னர் ஆம்பன் தீவிரப்புயலாக மாறி இன்று வடக்கு, வடமேற்கு திசையிலும் 18ஆம் தேதி முதல் வடக்கு, வடகிழக்கு திசையிலும் நகரும். இந்த நிகழ்வின் காரணமாக வங்கக்கடலில் இன்று மாலை 80 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
உறங்கும் குழந்தையை சூட்கேஸில் இழுத்துச் சென்ற தாய்! கேள்வியெழுப்புகிறது மனித உரிமைகள் ஆணையம்!
அதிகபட்சமாக 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், 18ஆம் தேதியன்று 120 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 145 கிமீ வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும். 19ஆம் தேதி 165 கிமீ முதல் 180 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
20ஆம் தேதி வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 170 கிமீ முதல் 190 கிமீ வேகத்தில் வீசக்கூடும். ஆம்பன் புயலின் நகர்வு காரணமாக கடலில் கடும் சீற்றம் காணப்படும். இந்த புயல் தமிழ்நாடு, ஆந்திர கடல் பகுதியை நெருங்கி வருவது போல் வந்து வடமேற்கு திசையில் நகர்ந்துச் சென்று 20ஆம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 16-17ஆம் தேதி முதல் தெற்கு வங்காள விரிகுடாவிலும், மே 17-18 தேதி முதல் மத்திய வங்காள விரிகுடாவிலும், மே 19-20 ஆகிய காலங்களில் வடக்கு வங்காள விரிகுடாவிலும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்தாம் நாள் அறிவிப்புகள்
மே 18ஆம் தேதி முதல் ஒடிசா கடற்கரையிலும், கடலுக்குள்ளேயும் யாரும் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.