தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆற்றில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில்! - ஒடிசா

புபனேஸ்வர்: ஒடிசா மாநிலம், பத்மாவதி கிராமத்தில் ஆற்றில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில், தற்போது வெளியே தெரிவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Mahanadi river Temple Odisha temple 500-yr-old temple resurfaces ஆற்றில் மூழ்கிய பழமையான கோயில் ஒடிசா மகாநாதியில் மூழ்கிய கோயில்கள்
மகாநதியில் மூழ்கிய கோயில்

By

Published : Jun 14, 2020, 8:35 AM IST

ஒடிசா மாநிலம், நயாகர் மாவட்டத்தில் ஓடும் மகாநதியில் மூழ்கிய 500 ஆண்டுகள் பழமையான கோயில், தற்போது வெளியே தெரிகிறது.

15 அல்லது 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பத்மாவதி கிராமத்தில் இந்தக் கோயில் தென்படுகிறது.

19ஆம் நூற்றாண்டில் மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஆற்றின்போக்கு மாறியது. அப்போது, ஆற்றை ஒட்டி அமைந்திருந்த பத்மாவதி கிராமம் முழுவதும் ஆற்றில் மூழ்கியது.

இந்த வெள்ளத்தின்போது அக்கிராம மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று வசிக்கத் தொடங்கிவிட்டனர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி பத்மாவதி கிராமத்தில் 22 கோயில்கள் இருந்ததாக அறியமுடிகிறது. அதில், உயரமான இந்தக் கோயிலை மட்டுமே பார்க்கமுடிவதாகத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக்கோயில் வெளியே தெரிந்ததாகவும்; அதன்பின்னர் தற்போது தான் வெளியே தெரிவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான அறக்கட்டளையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர், 'மகாநதி தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் வரை, ஆற்றின் இருபுறமும் 5 கி.மீ., தூரத்திற்கு அழிந்துபோன வரலாறு குறித்து ஒரு ஆவணம் தயாரிக்கப்பட்டுவருகிறது' - எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராணுவ சாலையில் கிடந்த சந்தேக பொருள்

ABOUT THE AUTHOR

...view details