இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், "குடியுரிமை திருத்த சட்டம் இந்திய குடிமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்தச் சட்டம் வெளிநாட்டுவருக்கு மட்டுமே பொருந்தும்.
அதேவேளையில், தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு (NRC) எங்களது ஆதரவு கிடையாதென பிஜூ ஜனதா தள எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தெளிவாக தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் கலவரம், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடாமல் அமைதியைக் காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
வடகிழக்கு மாநிலமான அசாமிலிருந்து சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் நோக்கில் அம்மாநிலத்தில் குடியுரிமைப் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான இந்த கணக்கெடுப்பின் முடிவில், தேசியக் குடியுரிமை பதிவேட்டில் 19 லட்சம் மக்கள் இடம்பெறவில்லை.
முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேட்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய அண்டை நாடுகளில் மதத் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியக்கள், பௌத்தர்கள் அடைக்கலம் தேடி இந்தியா வந்தால் அவர்களுக்கு எளிய முறையில் குடியுரிமைப் பெற்றுத்தரும் பொருட்டு இந்திய குடியுரிமை சட்டத்தில் (1957) மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டுவந்தது. ஆனால், இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதென நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஒருவாரமாக போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பிளாஸ்டிக் கழிவுகளுக்கு இலவச உணவு வழங்கும் புபனேஷ்வர் மாநகராட்சி!