இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பாஜக தலைவர்கள் பலர் பொது மேடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சமீப காலங்களில் அதிமாக கூறி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில், ஒருமுறை பயன்படுத்தி பின் தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, விற்பனை, செய்ய தடைவிதித்து அம்மாநிலத்தின் வனத்துறை இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாலித்தீன் கேரிபேக், பெட் பாட்டில்ஸ் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பட்டியலில் உள்ளது.