கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை பல சந்தர்ப்பங்களில் பிஷப் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் மூன்று கிறித்தவ சபை ஊழியப் பெண்களும் சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ முலக்கல், கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிஷப் முலக்கலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பாக கோட்டயம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நிபந்தனை பிணை பெற்று வெளியே வந்தவர், சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாக அறிய முடிகிறது.
இது, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பிணையை, கடந்த ஜூலை 1ஆம் தேதி ரத்து செய்வதாக அறிவித்தது. இந்த வழக்கில் இருந்து முலக்கலை விடுவிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி தள்ளுபடி செய்தது. பாலியல் வன்கொடுமை புரிந்த வழக்கில் முலக்கலுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அவரை விடுதலை செய்ய கேரள நீதிமன்றம் மறுத்தது.