சென்னை, பள்ளிக்கரணை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது அதிமுக கட்சியின் பேனர் விழுந்தது. நிலை தடுமாறிய சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது சாலையில் அவரது பின்புறம் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுபஸ்ரீ உயிரிழப்பு: இந்திய அளவில் அதிகமானோர் பயன்படுத்திய ஹேஷ்டேக்! #whokilledshubashree - twitter
பள்ளிக்கரணை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது அதிமுக பேனர் விழுந்து அப்பெண் உயிரிழந்தார். இது தொடர்பாக ட்விட்டரில் #whokilledshubashree என்ற ஹேஷ்டேக்கை அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்.
![சுபஸ்ரீ உயிரிழப்பு: இந்திய அளவில் அதிகமானோர் பயன்படுத்திய ஹேஷ்டேக்! #whokilledshubashree](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4430312-thumbnail-3x2-accident.jpg)
#WhoKilledShubashree
இது தொடர்பாக தமிழ்நாடு அரசை சென்னை உயர்நீதிமன்றம் சாடிய நிலையில், காவல் துறையின் விசாரணையை சென்னை மாநகர காவல் ஆணையர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ட்விட்டரில், #whokilledshubashree என்ற ஹேஷ்டேக்கை அதிகமானோர் பயன்படுத்தியுள்ளனர்.