சென்னை ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், சிங்கப்பூர்-இந்தியா ஹாக்கதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வந்துள்ளார். மோடி எப்போது தமிழ்நாடு சென்றாலும் அவரை எதிர்க்கும் விதமாகவும், வரவேற்கும் விதமாகவும் ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாவது வழக்கமான ஒன்று.
'#TNWelcomesModi'யை வென்ற '#gobackmodi' - Modi IIT
சென்னை: பிரதமர் மோடியின் சென்னை வருகையால் ட்விட்டரில் #gobackmodi, #TNWelcomesModi ஆகிய ஹேஷ்டாக்குகள் போட்டிப்போட்டு ட்ரெண்டாகியுள்ளது.
Modi
இந்நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய வருகையால் ட்விட்டரில் அவரை வரவேற்கும் விதமாக #TNWelcomesModi என்ற ஹேஷ்டாகும், அவரை எதிர்க்கும் விதமாக #gobackmodi என்ற ஹேஷ்டாகும் ட்ரெண்டாகியுள்ளது. ஆனால், உலகளவில் #gobackmodi என்ற ஹேஷ்டாக்கே தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போதும் அதற்கு முன்னரும் மோடி தமிழ்நாடு வந்தபோது இதே ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது.