நாடு முழுவதும் நடுநிலை வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வரும் என மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளல்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தி இல்லாத மாநிலங்களிலும் இனி இந்தியை கட்டாயமாக்குவது மத்திய அரசின் திட்டம். இதற்கு எதிராக இந்திய அளவில் #StopHindiImposition என்ற ஹேஷ்டாக் இந்தியவில் டிரெண்ட் செய்யப்பட்டுள்ளது.
இந்தித் திணிப்பை நிறுத்து: இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்
டெல்லி: இந்தித் திணிப்பை நிறுத்தக்கோரி #StopHindiImposition என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த இந்தி எதிர்ப்பு
அதேபோல் இந்த மும்மொழிக் கொள்கைக்கு எதிரான முதல் குரலாய் தமிழ்நாடு மக்கள் இருக்கின்றனர். #TNAgainstHindiImposition என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.