தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தவர் மகாகவி பாரதியார். இவர் சுதந்திர போராட்ட தியாகி, சமூக சீர்திருத்தவாதி, மகாகவி என்ற பன்முகம் கொண்டவர். இவரின் 137ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாகவி பிறந்த தினம் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!
டெல்லி: மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் மாமனிதர் சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூர்கிறேன். தேசப்பற்று, சமூக சீர்திருத்தம், கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர். அவரது எண்ணங்களும் பணிகளும் இன்றைக்கும் நம்மை எழுச்சியூட்டும் விதமாகவே உள்ளன.” என கூறியுள்ளார்.
மற்றொரு வாழ்த்தில், “சுப்பிரமணிய பாரதி, நீதி சமத்துவம் ஆகியவற்றை மற்ற எவற்றிற்கும் மேலாக நம்பினார். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று ஒருமுறை சொன்னார். மனிதனின் அவதியை போக்கி அதிகாரமளிக்க அவர் கொண்டிருந்த பார்வையை இது ஒன்றே விளக்குகிறது” என குறிப்பிட்டிருந்தார்.