தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊட்டச்சத்து குறைபாடு - ஐக்கிய நாடுகள் அறிக்கை

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்திற்கும் மேலாக 60 மில்லியனாகக் குறைந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு குறித்து - ஐக்கிய நாடுகள் அறிக்கை
ஊட்டச்சத்து குறைபாடு குறித்து - ஐக்கிய நாடுகள் அறிக்கை

By

Published : Jul 15, 2020, 1:51 AM IST

இதுதொடர்பாக உலக உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறுவனம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ”உலகளவில் கிட்டத்தட்ட 690 மில்லியன் மக்கள் 2019 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது பசி உள்ளதாக மதிப்பிட்டுள்ளனர், இது 2018 ஆம் ஆண்டிலிருந்து 10 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கான மிகவும் அதிகாரப்பூர்வமான உலகளாவிய ஆய்வு கண்காணிப்பு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை 2004-06ஆம் ஆண்டில் 249.4 மில்லியனிலிருந்து 2017-19ஆம் ஆண்டில் 189.2 மில்லியனாகக் குறைந்துவிட்டதாகக் கூறியுள்ளது.

சதவீத அடிப்படையில், இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு 2004-06ஆம் ஆண்டில் 21.7 சதவிகிதத்திலிருந்து 2017-19ஆம் ஆண்டில் 14 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைப்பதைக் காட்டும் இரண்டு துணைப் பகுதிகள் - கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா - கண்டத்தின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான சீனா மற்றும் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி (IFAD), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்), ஐ.நா. உலக உணவு திட்டம் (WFP) மற்றும் உலக சுகாதாரம் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாதிப்பு 2012 ஆண்டில் 47.8 சதவீதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டில் 34.7 சதவீதமாக குறைந்துள்ளது. 2012-16 ஆண்டுக்கு இடையில் அதிகமான இந்தியர்கள் உடல் பருமனாக மாறினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கரோனா தொற்றுநோய் 2020 இறுதிக்குள் 130 மில்லியனுக்கும் அதிகமான மக்களை நாள்பட்ட பசியின்மைக்கு தள்ளக்கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது.

சதவிகித அடிப்படையில், ஆப்பிரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியமாக உள்ளது, மேலும் 19.1 சதவிகித மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக உள்ளனர்.கரோனாவினால் உலகளாவிய உணவு முறைகளின் பாதிப்புகள் மற்றும் போதாமைகளை தீவிரப்படுத்துகிறது - உணவு உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை பாதிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details