நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் இந்தியா உலகளவில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லி உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் பட்டியலில் 35 புதிய பகுதிகள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,501 புதிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கரோனா பாதிப்பு என்ணிக்கை 32,810 ஆக உள்ளது.