நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர் - Nirbhaya Case convicts hanged at Delhi Tihar jail
05:34 March 20
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு இன்று அதிகாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லி திகார் சிறையில் நிர்பயா குற்றவாளிகள் முகேஷ், வினய், அக்ஷய், பவன் நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். மீரட் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்ட பவன் ஜலாத் குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணியை நிறைவேற்றினார். அவர்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
"நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டனர். எங்களுக்கு நீதி கிடைத்தது. நீதித் துறைக்கும், அரசுக்கும் நன்றி" என நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.