கரோனா பெருந்தொற்றை வைத்துக்கொண்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகப் பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்தரப் பிரதேசத்திலுள்ள இரண்டு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவருக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், இவரின் பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர். அவரைக் கலாய்க்கும்விதமான மீம்ஸ்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.