90 தொகுதிகளை கொண்ட ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், பாஜக, தேசிய லோக் தள் ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவினாலும், ஜனநாயக ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் மாநிலத்தில் சில பகுதிகளில் நல்ல வாக்கு சதவீதத்தை வைத்துள்ளது.
ஹரியானாவில் வாக்குப்பதிவு தீவிரம்!
சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் மூன்றரை மணி நிலவரப்படி 50.59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால், மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. வரலாற்றில் முதன்முறையாக 2014ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 47 தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தது. இந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. 90 தொகுதிகளில் 75 தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டிவருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுக்கிடையே அதிகார போட்டி நிலவுவதால் அக்கட்சி சட்டப்பேரவைத் தேர்தலில் கடும் தோல்வியை தழுவும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மாநில பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பினாலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதி நீக்கியது, தேசிய பாதுகாப்பு போன்ற விவகாரங்களுக்கு தேர்தல் பரப்புரையின்போது பாஜக முக்கியத்துவம் தந்தது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியிடப்படுகிறது.