தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆறடி சந்தனக் கட்டையில் மோடி சிலை! #happybirthdaynarendramodi - மோடி ரசிகரின் பிறந்தநாள் வாழ்த்து

புவனேஸ்வர்: நரேந்திர மோடியின் 69ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மோடி ரசிகர் ஒருவர் சந்தன மரத்திலான ஆறடி உயரம் கொண்ட மோடியின் சிலையை வடித்துள்ளார்.

Sculpture Dedicated To PM Modi

By

Published : Sep 17, 2019, 10:57 AM IST

நாட்டின் பிரதமரும் பாஜகவின் மூத்தத் தலைவருமான நரேந்திர மோடி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நரேந்திர மோடி இந்த ஆண்டு சொந்த மாநிலமான குஜராத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மோடிக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். பாஜக தொண்டர்கள் மோடியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக கொண்டாடிவருகின்றனர். சில மோடி ரசிகர்கள், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூற முடியவில்லையென்றாலும், சிற்பம் வடித்தும் கேக் வெட்டியும் உற்சாகமாக அவருக்கு வாழ்த்து கூறுகின்றனர்.

மோடி சிலை

அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த மோடி ரசிகர் ஸ்ரீதர் தாஸ் என்பவர் மோடியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நோக்கில் சிலை ஒன்றை செய்துள்ளார். சந்தன மரத்தில் செய்த ஆறடி கொண்ட சிலையில், மோடி, அவரது தாயார் ஆகிய இருவரின் உருவத்தை சிறிய அளவில் வடித்துள்ளார்.

மேலும், மோடியை சுற்றிலும் தொண்டர்கள் இருப்பது போன்றும் அச்சிலையை வடிவமைத்துள்ளார். இச்சிலையை செய்வதற்கு தாஸுக்கு 15 நாட்கள் ஆனதென அவர் கூறியுள்ளார். தாஸ் வடித்த சிலை ஒடிசா மாநிலம் முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படியுங்க:

69ஆவது பிறந்தநாளை தாயாரின் ஆசியுடன் தொடங்கிய நரேந்திர மோடி!

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் மோடி!

ABOUT THE AUTHOR

...view details