- இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாள்
தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியும் தன்னிகரில்லா தலைவருமான இரட்டைமலை சீனிவாசனின் 161ஆவது பிறந்ததினம் இன்று.
- மன்னர் மன்னன் இறுதிச் சடங்கு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர்மன்னன் புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை6) காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும். மன்னர் மன்னனுக்கு அமுதவல்லி என்ற மகளும், செல்வம், தென்னவன், பாரதி என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவரின் மனைவி 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
- தோனி பிறந்தநாள்
ராஞ்சியில் பிறந்து தனது ராட்டினம் போல் சுழலும் பேட்டாலும், பொறுமையாலும் உலககோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை தனதாக்கிய மகேந்திரசிங் தோனி இன்று தனது 39ஆவது வயதில் அடியெடுத்துவைக்கிறார்.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு