சந்திரயான் 2 விண்கலத்தின் 'விக்ரம்' லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் சவாலான பணியை இஸ்ரோ கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் மேற்கொண்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக 'விக்ரம்' லேண்டருடான இஸ்ரோவின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளும் பலனிக்கவில்லை.
இதனிடையே லேண்டர் பற்றி விளக்கமளித்த இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க நான்கு கட்டங்களில் செயல்பட்ட நிலையில், கடைசி கட்டத்தை சரியாக செயல்படுத்த தவறியதால், விக்ரம் லேண்டருடனான தொடர் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அடுத்து 14 நாட்களில் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சிப்போம் என்றும் கூறியிருந்தார்.