இந்திய பாதுகாப்பு தேசிய ஆலோசகர் அஜித் தோவல், இஸ்லாமிய-இந்து மதத் தலைவர்கள், அறிவுஜீவிகளுடன் தனது இல்லத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அயோத்தி நிலப் பிரச்னையில், உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை வழக்கு தொடர்ந்த இருதரப்பினரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் சில சமூக விரோதிகள், தேசத்துரோக சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.
இந்து-இஸ்லாமிய தலைவர்களுடன் அஜித் தோவல் ஆலோசனை இது தொடர்பாக அஜித் தோவல், இந்து-இஸ்லாமிய மதத் தலைவர்கள், அறிவுஜீவிகளுடன் ஆலோசித்துள்ளார். அப்போது அவர்கள் மத நல்லிணக்கம், அமைதிக்கு உறுதியளித்தனர். தொடர்ந்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் சில தேசவிரோத சக்திகள் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடும். விழிப்புணர்வுடன் அதனை முறியடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: அயோத்தி விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்து கண்டிக்கத்தக்கது - இந்திய வெளியுறவுத்துறை