பனிப்பிரதேசமான ஜம்மு காஷ்மீர் யூனியனில் கடந்த சில வாரங்களாக பயங்கரவாதிகள், ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச் சண்டை அவ்வப்போது நடந்துவருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவமும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்துகிறது.
இந்நிலையில் அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத தலைவன் ரியாஸ் நாய்கோ என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
இதனால் ஜம்மு காஷ்மீரில் அமைதியின்மை நிலவுகிறது. இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரம் குறித்து மாநில உயர்மட்ட அலுவலர்கள், ராணுவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, மாநிலத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பான தகவல்களை கூறினார். இது தொடர்பாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்களை தடுக்க சோதனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக” கூறுகின்றன.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள் 30 விழுக்காடு மீட்பு!