டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற எட்டாம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் வாக்கு சேகரித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட போகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைப்பாளர் பிரித்வி ரெட்டி கூறும்போது, “ஆம் ஆத்மி கட்சியை மக்கள் நம்பிக்கையின் கதிராகப் பார்க்கின்றனர். என்னதான் வெளிநாட்டு வாழ்க்கை என்றாலும் அங்கு இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்பார்கள். அவர்கள் நாடு திரும்பவே விரும்புவார்கள்; விரும்புகிறார்கள்.