நான்கு நாள் அரசு முறை பயணமாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் தொழில் துறை அமைச்சர் ஷாஜகான், பிப்டிக் தலைவர் சிவா, அரசு உயர் அதிகாரிகளும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
அங்கு நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்துகொண்ட முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள், புதுச்சேரியில் அதிக முதலீடு செய்ய முன்வர வேண்டும். விமான நிலைய விரிவாக்கம், டிஸ்னி வேர்ல்டு அமைப்பது, பொழதுபோக்கு மையங்கள் நிறுவுவது, கேசினோ ஏற்படுத்துவது. சென்னை-புதுச்சேரிக்கு இடையே கப்பல்,படகு போக்குவரத்து, துறைமுக மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி போன்றவற்றில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.