வெளிநாடு வாழ் இந்தியரான அரவிந்த் பிச்சை என்பவர் கடந்த செவ்வாய் அன்று விக்ராபாத் ரிசார்டில் மலையேறும் நான்கு சக்கர பைக்கினை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு மேட்டினை கடக்கும்போது, பைக் அவர் மீது கவிழந்தது விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.
பயிற்சி இல்லாமல் பைக் ஓட்டிய வெளிநாடு வாழ் இந்தியர் மரணம் - nri
ஹைதராபாத்: விக்ராபாத் ரிசார்டில் முறையான பயிற்சி இல்லாமல் மலையேறும் பைக் ஓட்டியதால், விபத்துக்குள்ளாகி வெளிநாடு வாழ் இந்தியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Aravind Pichai
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மலையேறும் 4 சக்கர பைக்கை பயிற்சியாளர் உதவியின்றி ஓட்டிச் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.