தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'என்ஆர்சி நாட்டை பிளவுபடுத்தும் பூதம்' - ப. சிதம்பரம் எச்சரிக்கை - தேசிய குடியுரிமை பதிவேடு சிதம்பரம் கண்டனம்

டெல்லி: தேசிய குடியுரிமை பதிவேடு திட்டம் இந்தியாவை பிளவுபடுத்தும் பூதம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

P Chidambaram
P Chidambaram

By

Published : Jan 6, 2020, 9:11 PM IST

டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று முகமூடி அணிந்த நபர்கள் நடத்திய தாக்குதலில் பல்வேறு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், ”நாட்டின் ஜே.என்.யு. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல், நாடு சர்வாதிகார ஆட்சிக்குச் செல்வதற்கான அடையளம். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் தலைநகரான டெல்லியில் இச்சம்பவம் நடைபெற்றது அவமானத்திற்குரியது” என்றார்.

தேசிய குடியுரிமை பதிவேடு குறித்து கவலை தெரிவித்த சிதம்பரம், இந்திய மக்கள் மீது தேவையற்ற சுமையை மத்திய அரசு திணிப்பதாகக் குற்றம்சாட்டினார். இத்திட்டம் பின்தங்கிய ஏழை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைபடுத்த துடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: ட்ரம்பின் தலைக்கு இவ்வளவு கோடியா? - விலை நிர்ணயம் செய்த ஈரான்!

ABOUT THE AUTHOR

...view details