புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் காமராஜர் தொகுதி சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளன. கடந்த ஆண்டு இதே சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த கல்லூரி மாணவி பலியானார். இந்த ஆண்டும், மழையினால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
சாலையை செப்பனிட வேண்டும்: என்.ஆர். காங்கிரஸ் சாலை மறியல் - என் ஆர் காங்கிரஸ்
புதுவை: குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிட்டு தர வலியுறுத்தி காமராஜர் தொகுதி மக்கள் என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
![சாலையை செப்பனிட வேண்டும்: என்.ஆர். காங்கிரஸ் சாலை மறியல் road](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5413874-911-5413874-1576668396428.jpg)
road
என் ஆர் காங்கிரஸ் சாலை மறியல்
எனவே சேதமடைந்துள்ள காமராஜர் நகர் தொகுதி சாலைகளை உடனே அரசு செப்பனிட்டு தரவேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் புவனேஸ்வர் தலைமையில், அப்பகுதி மக்கள் சாரம் சிக்னலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கிருந்து மக்கள் கலைந்துசென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.