தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புதுச்சேரியை காங்கிரஸ் அரசு சீரழித்து வருகிறது..!' -ரங்கசாமி குற்றச்சாட்டு - என்ஆர் காங்கிரஸ்

புதுச்சேரி: புதுச்சேரியை சீரழித்து வரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ரங்கசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரங்கசாமி பரப்புரை

By

Published : Apr 9, 2019, 3:11 PM IST

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் கே.நாராயணசாமி ஆதரித்து அக்கட்சித் தலைவர் ரங்கசாமி இன்று வில்லியனூர், கணுவாப்பேட்டை பகுதிகளில் வேன் மூலம் பரப்புரை மேற்கொண்டார். ஜக்கு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியை சீரழித்துவரும் அரசாக காங்கிரஸ் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனது ஆட்சியின்போது பொலிவுறு நகரம் திட்டத்திற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு, புதுச்சேரிக்கு அத்திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி தாங்கள்தான் கொண்டு வந்ததாக பெருமை அடித்துக் கொள்கின்றனர். அரசு மதுபானக் கடைகளை தனியாருக்கு குத்தகை விடுவதில் காங்கிரஸ் சிந்தித்து வருகிறது. புதுச்சேரியில் லாட்டரி சீட்டு மற்றும் சூதாட்ட கிளப் தொடங்குவது பற்றியும் இந்த அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால், வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை" என்று குற்றம்சாட்டினார்.

ரங்கசாமி தேர்தல் பரப்புரை

ABOUT THE AUTHOR

...view details