குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (National Population Register) புதுப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சகம் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து, 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப் 30ஆம் வரை நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இது தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு முன்னோட்டமாக இருக்குமோ என நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்தச் சம்பந்தமும் இல்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் (NRC) எந்தச் சம்பந்தமமும் இல்லை. உண்மையில் இது ஒரு சிறப்பான நடவடிக்கையாகும். மத்திய அமைச்சரவை கூட்டத்தில்தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிக்கப்படவில்லை.
பொதுமக்களுக்கு இடையூறு இல்லா வகையிலும், பொருட்செலவை குறைக்கும் நோக்கிலும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பையும் (Census), தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தவுள்ளோம்.