தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கூடங்குளத்தில் ‘சைபர்’ தாக்குதல் உண்மையே: ஒப்புக்கொண்ட அணுசக்தி கழகம்! - கூடங்குளத்தில் வைரஸ் தாக்குதல்

டெல்லி: கூடங்குளம் அணு உலையில் உள்ள ஒரு கணினியில் வைரஸ் தாக்குதல் நடந்தது உண்மைதான் என இந்திய அணுசக்தி கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஒப்புக் கொண்டுள்ளது.

Kudankulam power plant cyber attack

By

Published : Oct 30, 2019, 11:28 PM IST

Updated : Oct 31, 2019, 3:52 PM IST

இரண்டாயிரம் மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் இரு அணு உலைகளில் 1,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. இந்த அணுமின் நிலையத்தின் கணினிகளில் டி-ட்ராக் (DTRACK) என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடந்ததாக, இணைய தாக்குதல்களைக் கண்காணித்துவரும் முன்னணி நபர் ட்விட்டரில் இத்தகவலை மறைமுகமாக பதிவிட்டார். அதேபோல், இந்த வைரஸ் மூலம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகளிலிருந்து சில தகவல்கள், வைரஸை உருவாக்கியவர்களுக்கு அனுப்பிவருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை மறுத்து அணு உலை நிர்வாகம் அதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்தது. இந்நிலையில், இன்று (30-10-2019) இந்திய அணுசக்தி கழகம் வைரஸ் தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளது.

அணு உலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடுக! சு.ப உதயகுமார்

இது தொடர்பாக இந்திய அணுசக்தி கழகம் அளித்துள்ள விளக்கத்தில், “வைரஸ் தாக்குதல் நடந்திருப்பது உண்மைதான். இது சம்பந்தமான தகவல்கள் செப்டம்பர் 4ஆம் தேதி உயர் அலுவலர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. டிஏஈ (DAE) நிபுணர்கள் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட கணினி நிர்வாகப் பயன்பாட்டிற்காக இணையதள இணைப்போடு இயங்கிவந்ததாக இந்த ஆய்வில் தெரியவந்தது.

தமிழ்நாட்டை நோக்கி வரும் அடுத்த ஏவுகணை!

சம்பந்தப்பட்ட கணினி, நிர்வாகத்தின் முக்கிய வலைத்தொடர்பிலிருந்து நீக்கப்பட்டு தனித்து வைக்கப்பட்டுள்ளது. வலைதள கட்டமைப்பும், இணைய கட்டமைப்பும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. நடத்தப்பட்ட விசாரணையில், அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Last Updated : Oct 31, 2019, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details