மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் பணமதிப்பிழப்பு என்பது ஒரு பெரும் பேரழிவு போன்றது என்றும் இதனால் பல லட்ச மக்கள் தங்களின் நிம்மதியை இழந்தனர் என்றும் பெரும் பணம் படைத்தவர்கள் அரசின் இந்த நடவடிக்கையால் நல்ல பயன் அடைந்தனர் என்றும் தெரிவித்திருந்தார்.
பணமதிப்பிழப்பு தேவையில்லாத உடற்பயிற்சி போன்றது, உடலை அழித்துவிடும்! - மம்தா - Mamata Banerjee tweet on demonetization
கொல்கத்தா: பணமதிப்பிழப்பு என்பது தேவையில்லாத உடற்பயிற்சியை செய்து நம் உடலை அழிப்பது போன்றது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
West Bengal Chief Minister Mamata Banerjee
அது தேவையில்லாத உடற்பயிற்சிப் போன்றது என்று குறிப்பிட்ட அவர், இதனால் உடல் நலம் வீணாகுமே தவிர, வேறெந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பின் மூலம் மோடி பெரும் லாபத்தினை சம்பாதித்து இருப்பதாகவும், இந்த பணமதிப்பிழப்பு மூலம் பாஜக பெரும் ஊழலை அரங்கேற்றியுள்ளதாகவும் கடுமையான விமர்சனங்களை முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துவருவது குறிப்பிடத்தக்கது.