மோடி தலைமையிலான பாஜக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றுப் பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைத்து ஆறாண்டுகள் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுவருகிறது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மக்கள் துயர் துடைக்கும் நேரம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இம்மாதிரியான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு ஆட்சி அமைத்து ஆறாண்டுகள் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளம் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுவருகிறது. சாதனைகளை குறித்து பேசுவதற்கான நேரம் இது அல்ல. மக்களின் துயரை துடைப்பதற்கான நேரம். இம்மாதிரியான பேரிடர் காலத்தில், ஏழை மக்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.