தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி - யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது

புதுடில்லி : யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைத்தால் ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் உரைத்த யுபிஎஸ்சி...!
யுபிஎஸ்சி தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் உரைத்த யுபிஎஸ்சி...!

By

Published : Sep 30, 2020, 4:50 PM IST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடைபெறும் சிவில் சர்வீசஸ், முதல்நிலை தேர்வுகள் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கரோனா வைரஸ் தொற்றுப் பரவல், வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை ஆகியவற்றின் காரணமாக தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசும் உடனடியாக பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், யுபிஎஸ்சி சார்பில் இன்று (செப். 30) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு அனுமதி அளித்தததை போல், சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். சிவில் சர்வீஸ் தேர்வைத் தள்ளிவைத்தால், ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டுவரும் சுழற்சிமுறை பாதிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details