தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பப்ஜி கேம் விளையாடாதீங்க' - இளைஞர்களை எச்சரிக்கும் நிபுணர்கள் - பப்ஜி கேம் தடை

ஆன்லைன் கேமான பப்ஜியால் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதளவில் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

pubg
pubg

By

Published : Jul 29, 2020, 4:45 AM IST

உலகளவில் பிரபல ஆன்லைன் கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இளைஞர்கள் பெரும்பாலான நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது லாக்டவுன் காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்தில் சீனாவின் குறிப்பிட்ட செயலிகள் நாட்டின் பாதுக்காப்பிற்காகத் தடை செய்யப்பட்டதையடுத்து, பப்ஜி கேமுக்கும் தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் போர்க்கோடி தூக்கியுள்ளனர்.

பப்ஜி கேம் விளையாடும் இளைஞர்களுக்கு தவறான தூண்டுதலை ஏற்படுத்துவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. இந்த கேமால் ஆக்கிரமிப்பு எண்ணங்கள் ஏற்படும் என்றும், அந்த எண்ணம் இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது. கவலை, மன அழுத்தம், பொறுமையின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, அவர்களைத் தற்கொலைக்கு தூண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஒரு நாளில் ஒரு மணி நேரம் கேம் விளையாடினால், அது மனநிலைக்கு மிகவும் நல்லது, ஆனால், ஒரு நாளைக்கு 4-6 மணிநேரம் தொடர்ந்து விளையாடுவது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இரவு நேரங்களிலும் தொடர்ச்சியாக கேம் விளையாடுவது, கண் பார்வையைப் பெருமளவில் பாதிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், பப்ஜி கேம் விளையாட செல்போன் கொடுக்காத விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேம் போதை தற்கொலை போக்குகளை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை இதன்மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கேமின் இறுதியில் வெற்றிபெறுபவருக்கு 'வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்' பட்டம் கிடைப்பது, ஒருவித வெற்றி உணர்வை ஏற்படுத்துகிறது. யார் வென்றாலும் அந்த விளையாட்டை இன்னும் கவர்ச்சிகரமானதாகக் காண்கிறார்கள். அதேசமயம், தோல்வியுற்றவர் தாழ்வு மனப்பான்மையால் உயிரை இழக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details