தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘தேர்தலில் போட்டியில்லை’ - மாயாவதி திட்டவட்டம் - india

லக்னோ: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

mayawati

By

Published : Mar 20, 2019, 2:26 PM IST

உத்தரப்பிரதேச மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான இவர், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில் அவர் உள்ளிட்ட சில தலைவர்கள் போட்டியிடுவதற்காக சில தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க மாட்டோம் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நடைபெறவிருக்கும் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என மாயாவதி இன்று அறிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details