மகாராஷ்டிரா மாநிலம், பூனேவில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "2014ஆம் ஆண்டுக்கு முன்பு பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. பூனே, வடோதரா, அகமதுநகர், டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து பலர் உயிரிழந்தனர்.
மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை - மத்திய அமைச்சர் - மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை
மும்பை: மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளில், எங்கள் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை. தீவிரப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்ட மோடி அரசுக்கு நன்றி. சுகாதாரத்துறையில் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஏழை மக்களுக்கு மருத்துவ வசதிகளை குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்பது மோடியின் கனவு. ஆயுஷ்மான் பாரத் திட்டம், யோகா ஆகியவற்றை விளம்பரப்படுத்துவது, ஏழை மக்களின் மீது மோடி கரிசனம் வைத்திருப்பதை காட்டுகிறது" என்றார். இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதையும் படிங்க: சேனல்கள் மீதான தடை நீக்கப்பட்டதன் காரணம் என்ன? - அமைச்சர் விளக்கம்